அனைவருக்கும் சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும்: காற்று மாசு எச்சரிக்கை
ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரில் காற்றின் மாசு அளவு "மிகவும் மோசமான" பிரிவில் இருந்தது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரில் காற்றின் மாசு அளவு "மிகவும் மோசமான" பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) '305'-ஆக இருந்தது என்று மையம் நடத்திய காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது. .
இந்த ஆய்வுகளின் மூலம் கிடைத்த தரவுகளின்படி, தில்லி லோதி சாலையில் காற்றின் தரம், நண்பகல் 2.05 மற்றும் இரவு 10 மணிகளில் 203 மற்றும் 214 என்ற நிலையில் காணப்பட்டது. போலவே நொய்டாவிலும் காற்றின் தரம் (319) மோசமாக இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டது.
சாந்தினி சவுக், மதுரா சாலை ஆகியப் பகுதிகளிலும் காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தில்லியின் சில பகுதிகளில் காற்று மாசுபாடு காணப்படுகிறது. சுவாசிக்கும் காற்றின் தரத்தை குறிக்கும் எண்ணை மத்திய அரசாங்கத்தின் தர ஆய்வு நிறுவனம் (காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி நிறுவனம்) 0-50 வரை நன்று, 51-100 வரை திருப்தி, 101-200 நடுத்தரம், 201-300 மோசம், 301-400 மிக மோசம், 401-500 அபாயம் என்ற வரையறைகளை நிர்ணயம் செய்துள்ளது.
நகரத்தில் பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 போன்ற முக்கிய மாசுபாடுகள் முறையே 305 மற்றும் 180 ஐக் கொண்டுள்ளன.
"மக்கள் அனைவரும் கடின உழைப்பைக் குறைக்க வேண்டும். இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட அல்லது கடின உழைப்பைத் தவிர்க்க வேண்டும்." என்று சஃபர் கூறியுள்ளது.
மேலும் கூறுகையில், சுவாசப் பிரச்னைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும், மேலும் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும்.’’ என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், தில்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஏழு டிகிரி செல்ஷியஸாகத் தொடர்கிறது, அதிகபட்சம் 22 ஆக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...