லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர்-ஐ அமல்படுத்த விடமாட்டோம்: பீம் ஆர்மி தலைவர்

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்த விடமாட்டோம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆஸாத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 பிப்ரவரி 2020, 10:35 am

DIN


இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்த விடமாட்டோம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆஸாத் தெரிவித்துள்ளார்.

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர்-க்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிஏஏ மற்றும் என்பிஆர்-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மத்தியில் சந்திரசேகர் ஆசாத் பேசினார். அவர் பேசுகையில், 

"இந்தியாவில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சியை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம். இது என்னுடைய சவால். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். ஒரு சட்டம் நாட்டு நலனுக்கு எதிராக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது" என்றார்.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்த ஆஸாத், தன்னுடன் இணையுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.