கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சபர்மதி ஆசிரம விருந்தினர் பதிவேட்டில் என்னவென்று கையெழுத்திட்டுள்ளார் தெரியுமா டிரம்ப்?

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு  வருகை தந்தார்.

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 7:39 am

DIN


ஆமதாபாத்: இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு  வருகை தந்தார்.

1917ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தியடிகளின் இந்த சபர்மதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்தியா வரும் பல்வேறு உலகத் தலைவர்களும் இந்த ஆசிரமத்துக்குச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்துக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறப்பான பல்வேறு பொருட்கள் மற்றும் விஷயங்கள் குறித்து டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.

அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த நூல் நூற்கும் இராட்டையைப் பார்த்த டிரம்ப் தம்பதி அதனருகே அமர்ந்து, நூல் நூற்க முயன்றனர். அப்போது மெலனியா இராட்டையை சுழற்ற, அதற்கு ஏற்றவாறு  பஞ்சுத் திரி நூலாக மாறுவதை டிரம்ப் வியப்போடு பார்த்தார். இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் இராட்டை செயல்படும் விதம் குறித்து மிகுந்த ஆர்வத்தோடு கேட்டறிந்தனர்.

Story image

டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா, பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர்.

அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று குரங்குகள் பொம்மையைக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப் தம்பதிக்கு விளக்கினார்.

பிறகு, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேட்டில், ஆசிரமம் பற்றிய தங்களது கருத்துகளை பதிவிட்டு, தம்பதியர் கையெழுத்திட்டனர்.

Story image

அந்த பதிவேட்டில், எனது மிகச் சிறந்த நண்பர் நரேந்திர மோடிக்கு, இந்த சிறப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி என்று கூறி கையெழுத்திட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

சபர்மதி ஆசிரம பயணத்தை முடித்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்துக்குப் புறப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.