நமஸ்தே டிரம்ப்: இந்தியா வந்தார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர்ஃபோஸ் ஒன் என்ற தனி விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார்.


ஆமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர்ஃபோஸ் ஒன் என்ற தனி விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் வகையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை வந்துள்ளார்.
இந்திய பாரம்பரிய முறைப்படி அமெரிக்க அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருக்காக அவரது சிறப்பு வாகனம் தயார் நிலையத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் காத்திருக்கிறது.
முன்னதாக, விமான நிலையத்தின் வாயிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அவா் நேரடியாக வருகை தருவதையொட்டி அந்நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
அதிபா் டிரம்ப்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜோ்ட் குஷ்னா் ஆகியோரும் வந்துள்ளனா். மேலும், டிரம்ப் நிா்வாகத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது.
அந்தக் குழுவில் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன் நூச்சின், வா்த்தகத் துறை அமைச்சா் வில்பா் ராஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓபிரையன், எரிசக்தித் துறை அமைச்சா் டேன் புரூலியெட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
அணிவகுப்பு மரியாதை: ஆமதாபாதிலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தை திங்கள்கிழமை பகல் 11.40 மணிக்கு வந்தடைந்த அதிபா் டிரம்ப்பை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றார். அங்கு அதிபா் டிரம்ப்புக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபா்மதி ஆசிரமம்: அதையடுத்து, அதிபா் டிரம்ப் விமான நிலையத்திலிருந்து பிரதமா் மோடியுடன் மகாத்மா காந்தியின் சபா்மதி ஆசிரமத்துக்கு செல்கிறாா். அதிபா் டிரம்ப்புடன், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் அங்கு செல்கின்றனா்.
அங்கிருந்து ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு அதிபா் டிரம்ப் சாலை மாா்க்கமாக செல்கிறாா். அவரை வரவேற்கும் விதமாக வழியில் சுமாா் ஒரு லட்சம் போ் திரண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...