இராட்டை சுற்றி நூல் நூற்ற டிரம்ப் தம்பதி; மூன்று குரங்குகள் பற்றியும் கேட்டறிந்தனர்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்தார்.


ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்தார்.
1917ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தியடிகளின் இந்த சபர்மதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்துக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறப்பான பல்வேறு பொருட்கள் மற்றும் விஷயங்கள் குறித்து டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.

அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த நூல் நூற்கும் இராட்டையைப் பார்த்த டிரம்ப் தம்பதி அதனருகே அமர்ந்து, நூல் நூற்க முயன்றனர். அப்போது மெலனியா இராட்டையை சுழற்ற, அதற்கு ஏற்றவாறு பஞ்சுத் திரி நூலாக மாறுவதை டிரம்ப் வியப்போடு பார்த்தார். இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் இராட்டை செயல்படும் விதம் குறித்து மிகுந்த ஆர்வத்தோடு கேட்டறிந்தனர்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா, பிரதமர் மோடியுடன் சபர்மரி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர்.
அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று குரங்குகள் பொம்மையைக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப் தம்பதிக்கு விளக்கினார்.
பிறகு, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் விருந்தினர் பதிவேட்டில், ஆசிரமம் பற்றிய தங்களது கருத்துகளை பதிவிட்டு, தம்பதியர் கையெழுத்திட்டனர்.
சபர்மதி ஆசிரம பயணத்தை முடித்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்துக்குப் புறப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...