தனிப்பட்ட லாபங்களுக்காக சில கட்சிகள் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இங்கு நாம் அனைவரும் எல்லா மதத்தினரையும் மதிக்க வேண்டும். நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும்.
சில அரசியல் கட்சிகள் தனிப்பட்ட லாபங்களுக்காக அரசியல் விளையாட்டு விளையாடுகின்றன. இது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு சேதம் விளைவிக்கிறது. பாஜக அரசாங்கத்தின் வகுப்புவாத மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட சிந்தனை காரணமாக 2019ல் பெரும்பாலான இடங்களில் பிரிவினை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட மக்களும் ஒத்துழைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் புத்தாண்டு தினத்தன்று நாட்டின் குடிமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: பிணை கோரிய இடைத்தரகா் ஜேம்ஸின் மனு தள்ளுபடி

மேற்கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

தவறான சிகிச்சையால் முடங்கிய தொழிலாளி: தேசிய சட்ட ஆணைய உத்தரவின் பேரில் கோவை நீதிமன்றம் விசாரணை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


