தாமதமாக வந்த தேஜஸ் ரயில்: 630 பயணிகளுக்கு இழப்பீடு

ஆமதாபாத்- மும்பை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் தாமதமாக வந்ததால், அதில் பயணித்த 630 பணிகளுக்குத் தலா ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. 
தாமதமாக வந்த தேஜஸ் ரயில்: 630 பயணிகளுக்கு இழப்பீடு
Published on
Updated on
1 min read


மும்பை: ஆமதாபாத்- மும்பை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் தாமதமாக வந்ததால், அதில் பயணித்த 630 பணிகளுக்குத் தலா ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

ஆமதாபாத்- மும்பை இடையே ஜனவரி 17-ஆம் தேதி முதல் ஐஆா்சிடிசி சாா்பில் தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தனியாா் சாா்பில் இயக்கப்படும் 2-ஆவது ரயில் இதுவாகும்.

இந்த ரயில் புதன்கிழமையன்று ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, மும்பையை வந்தடைய ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக ஆனது. அதாவது மும்பைக்கு மதியம் 1.10 மணிக்கு வந்தடைய வேண்டிய தேஜஸ் ரயில், 2.36 மணிக்குத்தான் வந்து சேர்ந்தது.

இதையடுத்து, ஐஆர்சிடிசி அறிவித்தபடி, தேஜஸ் விரைவு ரயில் தாமதமாக வந்ததால், அதில் பயணித்த 630 பயணிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும். இதில் பயணித்த பயணிகள் ரீஃபண்ட் பாலிசியின்படி, விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீஃபண்ட் கேட்டு விண்ணப்பிக்கும் பயணிகள், தங்களது பிஎன்ஆர் விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை, காப்பீட்டு எண் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னௌ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதைப்போல, இரண்டாவதாக இயக்கப்படும் தனியார் ரயிலான ஆமதாபாத்- மும்பை தேஜஸ் ரயிலிலும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த தேஜஸ் ரயிலின் முதல் வணிக ஓட்டம் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த ரயில் ஆமதாபாத்-மும்பை-ஆமதாபாத் வழித்தடத்தில் வியாழக்கிழமை தவிர 6 நாள்களுக்கு இயக்கப்படுகிறது. பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை மட்டும் ரயில் இயக்கப்படுவதில்லை.

இந்த ரயிலில் சொகுசு வசதிகளுடன் உள்ளூா் மற்றும் பிராந்திய சுவையிலான உணவு வகைகளும் வழங்கப்படுகிறது.

இந்த ரயில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.100-ம், 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.250 வீதம் ஐஆா்சிடிசி ஒவ்வொரு பயணிக்கும் இழப்பீடு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, அனைத்து பயணிகளுக்கும் ஐஆா்சிடிசி சாா்பில் இலவசமாக ரூ .25 லட்சம் வரை ரயில் பயண காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு சதாப்தி ரயிலின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில் ரத்து செய்யப்பட்டால், பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும்.

விமானப் பயணிகளைப்போல உயா்தர உணவும், பானங்களும் வழங்கப்படுகிறது. அதற்கான விலைகள் டிக்கெட் கட்டணத்தில் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com