ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

போராட்டக்காரர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்: அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான தவறான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :27 ஜனவரி 2020, 8:20 am

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான தவறான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான தவறான வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும், மேலும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும், உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.