அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.யில் போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை பெற்ற ஆசிரியர்கள் மீது 48 வழக்குகள் பதிவு

உத்தரப் பிரதேசத்தில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளது தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :30 ஜனவரி 2020, 6:43 am

DIN


உத்தரப் பிரதேசத்தில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளது தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூர் மற்றும் பரேலி மாவட்டங்களில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் ஆசிரியர்கள் வேலை பெற்றுள்ளது குறித்து பல்வேறு புகார்கள் குவிந்துள்ளன. மாவட்ட கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் இந்த ஆசிரியர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்தது உறுதியானது. எனவே இவர்கள் பணியில் இருந்து கடந்த 2016ல் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

பரேலி மாவட்ட அதிகாரி தனுஜா திரிபாதி இதுகுறித்து, 'போலி சான்றிதழ்கள் அளித்த ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இரண்டு மாவட்டங்களில் மொத்தம் 48 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்று ஆசிரியர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.