கரோனா: ரயில் பெட்டிகளில் 118 பேருக்கு சிகிச்சை, 72 பேர் வீடு திரும்பினர்

​கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனி வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 118 பேரில் 72 பேர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனி வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 118 பேரில் 72 பேர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பரவல் நாளுக்குநாள் தீவிரமாகி வருகிறது. இதைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன. மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப 5 மாநிலங்களில் 960 தனி ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே உருவாக்கியது.

எனினும் 2 மாநிலங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தில்லியில் 503 ரயில் பெட்டிகளும், உத்தரப் பிரதேசத்தில் 372 ரயில் பெட்டிகளும் உள்ளன. மற்ற ரயில் பெட்டிகள் தெலங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளன.

இதுபற்றி அலுவலர் ஒருவர் தெரிவித்ததன்படி: 

இன்றைய தேதி வரை தில்லியில் 40 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 78 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 22 நோயாளிகளும், தில்லியில் 24 நோயாளிகளும் உள்ளனர். 72 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com