கரோனா: ராஜஸ்தானில் புதிதாக 204, ஒடிசாவில் 495 பேரும் பாதிப்பு
ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் தகவலைச் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

corona test

corona test
ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் கரோனா பாதிப்பு நிலவரத்தை அந்த மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான்
இன்று காலை 10.30 நிலவரப்படி கரோனாவுக்கு மேலும் 204 பேர் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு மொத்தம் இதுவரை 19,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,461 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 442 பேர் நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
ஒடிசா
இன்று ஒடிசாவில் புதிதாக 495 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 8,601 ஆக உயர்ந்துள்ளது. அதில் 2,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயிலிருந்து 5,705 மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2, 2771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 6,48,315 ஆக உயர்ந்துள்ளது. அதில், 2,35,433 பேர் சிகிச்சையிலும், 3,94,227 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...