கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கொல்கத்தா: கரோனா உறுதி செய்யப்பட்டவருக்கு சாதாரண உடல்வெப்பநிலை

தில்லியில் இருந்து குவகாத்தி வழியாக கொல்கத்தா வந்த பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவருக்கு சாதாரண உடல் வெப்பநிலை இருந்தது தெரிய வந்துள்ளது.

News image

கொல்கத்தா: கரோனா உறுதி செய்யப்பட்டவருக்கு சாதாரண உடல்வெப்பநிலை

Updated On :16 ஜூலை 2020, 9:32 am

ANI


கொல்கத்தா: தில்லியில் இருந்து குவகாத்தி வழியாக கொல்கத்தா வந்த பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவருக்கு சாதாரண உடல் வெப்பநிலை இருந்தது தெரிய வந்துள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் அவருக்கு உடல்வெப்ப நிலையை பரிசோதித்த போது, சாதாரண வெப்பநிலையே பதிவானதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் அதுல் தீட்சித் கூறியுள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஜூலை 14-ம் தேதி வந்த பயணி, தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதற்கான ஆய்வு முடிவை வைத்திருந்தார். ஆனால், அவருக்கு உடல் வெப்பநிலையை பரிசோதித்த போது, சாதாரண வெப்பநிலையே இருந்தது தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இதுவரை 34,427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.