சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் 2,602 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. முதல் முறையாக நேற்று இரண்டாயிரத்தை கடந்த நிலையில் இன்று 2500-ஐக் கடந்த நிலையில் இன்று 2,600 ஆக உயர்ந்துள்ளது.

News image

Andhra Pradesh update

Updated On :17 ஜூலை 2020, 9:25 am

ANI


ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. முதல் முறையாக நேற்று இரண்டாயிரத்தை கடந்த நிலையில் இன்று 2500-ஐக் கடந்த நிலையில் இன்று 2,600 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 2,602 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 2,602 பேருக்கு (8 பேர் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்)  கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டிவிட்டது.

மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதித்து 42 பேர் பலியாகியுள்ளதை அடுத்து ஆந்திரத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்துவந்த நிலையில், நேற்று சுமார் இரண்டாயிரத்தை எட்டியது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 40,646 ஆக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.