/

இந்தியாவில் ஒரேநாளில் 40,425 பேருக்கு கரோனா பாதிப்பு; 681 பேர் பலி

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

News image
நாட்டில் கரோனா தொற்று பாதித்து மரணமடைந்தவர் விகிதம் 4.52%
Updated On :20 ஜூலை 2020, 4:32 am

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்துக்கு பல மாநிலங்கள் தளா்வுகளை அறிவித்து வருகின்றன. அதன் காரணமாக பொது வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது/

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டில் திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 40,425 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் ஓட்டுமொத்த கரோனா பாதிப்பு 11,18,043 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 681 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 27,497 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இருந்து இதுவரை 7,00,087 போ் மீண்டுள்ளனா். 3,90,459 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.