/

டேப் ரெக்கார்டரைப் போன்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு இனி வேலைக்கு ஆகாது: உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு

டேப் ரெக்கார்டரைப் போன்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு இனி வேலைக்கு ஆகாது என உத்தரப்பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி சாடியுள்ளார். 

News image
காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி
Updated On :20 ஜூலை 2020, 1:37 pm

DIN

டேப் ரெக்கார்டரைப் போன்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு இனி வேலைக்கு ஆகாது என உத்தரப்பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி சாடியுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மற்றும் அதனை மாநில அரசு கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'டேப் ரெக்கார்டரைப் போல மாநில அரசின் பத்திரிகையாளர் சந்திப்புகள் இனி இயங்காது என்றும் தற்போதைய கரோனா நெருக்கடி சூழ்நிலையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் 

உ.பி.யின் இரண்டு முக்கிய நகரங்களான லக்னோ மற்றும் கோரக்பூரின் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பது கவலை அளிக்கிறது. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது' என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் மாநில அரசு கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதற்குப் பதிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.