காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி

தெலங்கானாவில் கரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு தனது கணவர், மாமனார், மாமியாரை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார் கர்ப்பிணிப் பெண்.

News image
தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி
Updated On :20 ஜூலை 2020, 10:37 am

DIN


வாரங்கல்: தெலங்கானாவில் கரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு தனது கணவர், மாமனார், மாமியாரை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார் கர்ப்பிணிப் பெண்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில், ஒரே வாரத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். 

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண், தன்னுடன் பணியாற்றும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்த நிலையில், கணவர் காய்ச்சல் காரணமாக ஜூலை 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, கணவரின் தந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் மரணம் அடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாமியார், அதற்கு அடுத்த நாளே மரணம் அடைந்தார். 

வீட்டில் அடுத்தடுத்து நேரிட்ட இருவரின் மரணத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணிக்கு அடுத்த பேரதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

ஒரே வீட்டில் 3 பேரை இழந்து கர்ப்பிணி பெண், தன்னந்தனியாக தவிக்கும் நிலை, அந்தப் பகுதிகளை மக்களை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.