7 கவுன்சிலர்களுக்கு கரோனா எதிரொலி: திருவனந்தபுரம் மேயர் தனிமைப்படுத்தல்
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் முன்னெச்சரிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.


திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் முன்னெச்சரிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
கேரள மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா வைரஸ் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு ஒருசில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கேரளத்தில் 16,110 பேருக்கு கரேனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9,466 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 6,594 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு 50 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே திருவனந்தபுரம் மாநகராட்சியில் 7 கவுன்சிலர்களுக்கு அண்மையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கவுன்சிலர்கள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஸ்ரீகுமார் முன்னெச்சரிக்கையாக இன்று முதல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...