இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5.15 லட்சம் கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5.15 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image

ஐசிஎம்ஆர்

Updated On :27 ஜூலை 2020, 7:10 am

ANI

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5.15 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 26-ல் மட்டும் 5,15,472 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,68,06,803 கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கரோனா பரிசோதனைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. தொற்று மேலும் பரவாமல் இருக்க ஒரே வழி தொடர் சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையளிப்பது தான் என்று கூறியுள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 708 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 14,35,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.