/

கர்நாடகத்தில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

​கர்நாடகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,324 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
​கர்நாடகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,324 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :27 ஜூலை 2020, 1:30 pm

DIN


கர்நாடகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,324 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 75 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,01,465 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று 1,847 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 37,685 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் 61,819 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில் 598 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மற்ற காரணங்களால் பலியானவர்கள் 8 பேர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.