இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தில்லி அரசு மருத்துவமனையில் 1,500க்கும் மேற்பட்ட கரோனா படுக்கை வசதிகள்

தலைநகரில் தில்லியில் உள்ள நான்கு அரசு மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட கரோனா படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2020, 6:44 am

ANI

Over 1,500 COVID-19 beds available in four govt hospitals in Delhi

தலைநகரில் தில்லியில் உள்ள நான்கு அரசு மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட கரோனா படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் உச்சத்தைத் தொட்டு தற்போது ஓரளவுக்குக் குறைந்து வருகிறது. முன்னதாக, கரோனா தொற்று அதிகரித்த போது கரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் ஏராளமான நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர். 

பெரும்பாலான மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டதால் வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமமும் ஏற்பட்ட நிலையில், தற்போது நான்கு அரசு மருத்துவமனைகளில் சுமார் 1,500 படுக்கை வசதிகள் காலியாக உள்ளன. 

மேலும், சப்தர்ஜங் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் 404 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 1,283 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் சுட்டுகையில் பதிவிட்டுள்ளது. 

தில்லியில் புதிதாக 1,075 பேருக்கு கரோனா பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,30,606ஐ எட்டியுள்ளன. தில்லியில் இதுவரை 1,14,875 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,827 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.