இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அசாம் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

News image

அசாமில் வெள்ளம்

Updated On :27 ஜூலை 2020, 8:23 am

ANI

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வந்த கனமழை காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் கிளை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில், அசாமில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 56,71,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 615 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கசிரங்கா தேசியப் பூங்காவில் 132க்கும் மேற்பட்ட விலங்குகள் நீரில் மூழ்கியும், வாகனத்தில் அடிபட்டும் பலியாகியுள்ளன. 

மேலும், அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள திகிர்பம் பஜாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிராம மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அசாமின் பல்வேறு மாவட்டங்களில் இந்தாண்டு நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.