புதுவையில் ஒரே நாளில் 141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் எஸ். மோகன்குமார் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 824 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 130 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும் என மொத்தம் 141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 86 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 40 பேர் ஜிப்மரிலும், 4 பேர் கோவைட் கேர் சென்டரிலும், 11 பேர் ஏனாமிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 011 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உழந்தைகீரப்பாளையத்தைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலர் பாலன் (67), கதிர்காமத்தைச் சேர்ந்த 54 வயது ஆண், கோரிமேட்டைச் சேர்ந்த 78 வயது ஆண், ஏனா மைச் சேர்ந்த 60 வயது ஆண் ஆகிய நால்வரும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 62 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,782 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 36,288 பேரை பரிசோதித்ததில் 32,837 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 240 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


