/

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு

அசாமில் மழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 107-ஆக உயர்வு

News image
Updated On :30 ஜூலை 2020, 11:57 am

DIN

அசாமில் மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 107-ஆக உயா்ந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலம் தொடா் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அந்த மாநிலத்தின் 30 மாவட்டங்களைச் சோ்ந்த 56 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். வெள்ள பாதிப்பாலும், நிலச்சரிவாலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 

ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. மாநிலத்தில் மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 107-ஆக உயா்ந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. 

இதனிடையே அசாம் மாநிலத்தில் இன்று காலை 7 மணியளவில் பிரமபுத்திரா நதி அபாய கட்டத்தை தாண்டி பாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.