வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மகாராஷ்டிரத்தில் 2,560 காவலர்களுக்கு கரோனா தொற்று, 33 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 33 காவலர்கள் பலியாகியிருப்பதாக காவல் அலுவலர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜூன் 2020, 10:42 am

DIN


மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 33 காவலர்கள் பலியாகியிருப்பதாக காவல் அலுவலர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினரும், கரோனா தொற்றுக்கு அதிகளவில் ஆளாகின்றனர்.

இதுபற்றி காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்ததாவது:

மகாராஷ்டிரத்தில், காவல் அலுவலர்கள் உள்பட 33 காவலர்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் 18 பேர் மும்பை காவல் படையைச் சேர்ந்தவர்கள். இதுவரை 2,562 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 196 காவல் அலுவலர்கள் உள்பட மொத்தம் 1,497 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பொது முடக்கத்தின்போது 260 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்காக 841 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 86 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுதவிர்த்து 45 சுகாதாரப் பணியாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.