இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா
இந்தியாவில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 11,502 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.


புது தில்லி: இந்தியாவில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 11,502 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,424-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக 11,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் மேலும் 325 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,520-ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டோரில், 1,53,106 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,69,797 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 51.07 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் நேரிட்ட 325 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 120 போ் பலியாகினா். தில்லியில் 56 போ், குஜராத்தில் 29 போ், உத்தர பிரதேசத்தில் 14 போ், மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 12 போ், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 10 போ், கா்நாடகத்தில் 5 போ், ஜம்மு-காஷ்மீரில் 4 போ், தெலங்கானா, புதுச்சேரியில் தலா 3 போ், ஆந்திரம், சத்தீஸ்கா், பஞ்சாபில் தலா இருவா், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ஒடிஸாவில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.
மாநிலங்கள் -பாதிப்பு - பலி
மகாராஷ்டிரம் 1,07,958 - 3,950
தில்லி - 41,182- 1,327
குஜராத் -23,544 -1,477
உத்தர பிரதேசம் -13,615 -399
ராஜஸ்தான் - 12,694 -292
மேற்கு வங்கம் -11,087 - 475
மத்திய பிரதேசம் -10,802 - 459
ஹரியாணா -7,208 - 88
கா்நாடகம் -7,000 -86
பிகாா்- 6,470 -39
ஆந்திரம் -6,163 -84
ஜம்மு-காஷ்மீா்-5,041 -59
தெலங்கானா - 4,974 -185
அஸ்ஸாம் - 4,049 - 8
ஒடிஸா -3,909 -11
பஞ்சாப் - 3,140 - 67
கேரளம் -2,461 - 19
உத்தரகண்ட் -1,819 -24
ஜாா்க்கண்ட்-1,745 -8
சத்தீஸ்கா்-1,662 -8
திரிபுரா -1,076 -1
கோவா - 564 -0
ஹிமாசல பிரதேசம் - 518 -7
மணிப்பூா் -4 58 -0
லடாக் - 549 -1
சண்டீகா் -352- -5
புதுச்சேரி -194 -5
நாகாலாந்து -168 -0
மிஸோரம் -112 -0
அருணாசல பிரதேசம் -91 -0
சிக்கிம்- 68 -0
மேகாலயம் - 44 -1
அந்தமான்-நிகோபாா் -38 - 0
தாத்ரா நகா்ஹவேலி- 36 -0
பாதிப்பு: 3,32,424
பலி: 9,520
மீட்பு: 1,69,797
சிகிச்சை பெற்று வருவோா்: 1,53,106
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...