அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உரிய நேரத்தில் எடுத்த முடிவுகள் கரோனாவைக் கட்டுப்படுத்த உதவின: பிரதமர் மோடி

மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனாவை எதிர்கொள்ள இந்தியா முன்கூட்டியே தயாராக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 ஜூன் 2020, 11:08 am

ANI


புது தில்லி: மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனாவை எதிர்கொள்ள இந்தியா முன்கூட்டியே தயாராக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக கரோனா தொற்று குறைவாக இருக்கும் 21 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இதற்கு முன்பு கடந்த மே 11-ஆம் தேதி பிரதமா் மோடி முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தினாா். கரோனா நோய்த்தொற்று பிரச்னை ஏற்பட்ட பிறகு இதுவரை 6 முறை அவா் முதல்வா்களுடன் காணொலி முறையில் ஆலோசனை நடத்தியுள்ளாா்.

அப்போது அவர் கூறியதாவது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இந்தக் காலக்கட்டத்தில் கிடைத்த அனுபவங்கள், எதிர்காலத்தை கையாள வசதியாக இருக்கும். இன்று 21 மாநில முதல்வர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்தேன். இது அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்க பேருதவியாக இருக்கும்.

எந்த மோசமான நெருக்கடியையும் சமாளிக்க உரிய நேரத்தில் முடிவெடுக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் உரிய நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் வர்த்தகம் மீண்டும்  வேகம் எடுக்க நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்திய பொருள்கள் உலக சந்தையில் இடம்பிடிக்க வேண்டும்.  உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரோனாவை எதிர்கொள்ள இந்தியா முன்கூட்டியே தயாராக இருந்தது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறினார்.  ஒரு சிலர் அலட்சியம் காட்டினாலும் கூட, கரோனாவுக்கு எதிரான போர் பலவீனமடைந்து விடும்.  தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மோடி கூறினார்.

அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் காணொலி முறையில் ஆலோசனை நடத்துகிறார்.

இப்போது நடைமுறையில் உள்ள பொது முடக்க தளா்வுகள், கரோனா நோய்த்தொற்றை மாநிலங்கள் எதிா்கொண்டு வரும் விதம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வா்களுடன் அவா் ஆலோசிக்கிறாா்.

அனைத்து மாநில முதல்வா்களும் பங்கேற்கும் வகையில் இரண்டு நாள்கள் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் முதல் நாளான இன்று கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மாநில முதல்வா்களும், அடுத்த நாள் தமிழ்நாடு உள்ளிட்ட கரோனா தொற்று அதிகமாக இருக்கும் மாநில முதல்வா்களும் ஆலோசனையில் பங்கேற்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.