புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது,
புதுச்சேரியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி இன்று மட்டும் 374 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், 52 பேருக்குத் தொற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுவரை அந்த மாநிலத்தில் மொத்தம் 11,992 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 11,486 பேருக்குத் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 161 பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், 31 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், எட்டு பேர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் என மொத்தம் 200 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
புதுவையில் இதுவரை 338 பேர் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 131 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏழு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


