25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஆந்திரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 497 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

andhra corona victims

Published On :27 ஜனவரி 2024, 10:20 pm IST

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 497 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும், கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கரோனா பாதிப்பு 10,331 ஆக உள்ளது. 

அனந்தபூரில் அதிகபட்ச கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன்பின்னர், கர்னூல், கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

தற்போது 5,423 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 4,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.