மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தில்லியில் புதிதாக 2,948 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :27 ஜூன் 2020, 2:08 pm

DIN


தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை தில்லி சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,948 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 80,188 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 66 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று 2,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 49,301 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 28,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 19,180. இதுவரை மொத்தம் 4,78,336 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.