மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இந்தியாவில் தொடா்ந்து 6-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜூன் 2020, 4:15 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 5ஆம் கட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. எனினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், தில்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் தொடா்ந்து 6-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமானோருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக தகவல்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,459 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,28,859லிருந்து 5,48,318ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 380 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,095லிருந்து 16,475ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 12,010 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713லிருந்து 3,21,723ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,64,626 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 86,575 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை 7,429 பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.