அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிறிய தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்: பிரதமர் மோடி

பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

News image
நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி
Updated On :30 ஜூன் 2020, 10:44 am

DIN


புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக கரோனா பரவலும் கட்டுப்படுத்தப்பட்டது. பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாகப் பின்பற்றவில்லை. சிலர் அலட்சியமாக செயல்படுவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த காலத்தில் காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டில் நிலைமை சீராகவே உள்ளது என்று கூறினார்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவங்களிடையே பதற்றம் நிலவும் நிலையிலும், ஜூலை 1 முதல் நாட்டில் 2-ஆம் கட்ட பொதுமுடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் சூழலிலும் பிரதமா் மோடி உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்த்தொற்று சூழல் ஏற்பட்டதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்ற இருப்பது இது 6-ஆவது முறையாகும்.

முதலில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி உரையாற்றியபோது மாா்ச் 22-ஆம் தேதி ஒருநாள் பொது முடக்கத்தை அறிவித்தாா்.

பின்னா் மாா்ச் 24-ஆம் தேதி உரையாற்றியபோது கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க நாட்டில் 21 நாள் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தாா். ஏப்ரல் 3-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு வெளியிட்ட காணொலிச் செய்தியில், கரோனா முன்களப் பணியாளா்களை கௌரவிக்கும் வகையில் ஏப்ரல் 5-ஆம் தேதி வீடுகளில் விளக்கேற்றக் கூறியிருந்தாா்.

பின்னா் ஏப்ரல் 14-ஆம் தேதி ஆற்றிய உரையின்போது பொது முடக்கம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தாா். இறுதியாக கடந்த மே 12-ஆம் தேதி மக்களுக்கு உரையாற்றியபோது நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு நிதி தொகுப்பை அறிவித்திருந்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.