திருமண விழாவில் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட மோதல்: 7 பேர் படுகாயம்
திருமண விழாவில் இசை நிகழ்ச்சியால் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.


உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் இசை நிகழ்ச்சியால் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள டிட்டர்வாடா கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பாடல்கள் சத்தமாக ஒலிக்கவே, ஒரு குழு அதற்கு ஆட்சேபித்தது.
இதனால், திருமண விழாவில் இரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொருட்களை எல்லாம் வீசி இரு குழுவினரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து மோதலை நிறுத்தினர். இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்ததாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வழக்கு குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...