புது தில்லி: யெஸ் வங்கியில் இருந்து கடன் பெற்ற தனியார் நிறுவனம், வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் மகள் நிறுவனத்தில் செய்திருக்கும் ரூ.600 கோடி முதலீடு லஞ்சமாகவே பார்க்கப்படும் என்று சிபிஐ கூறியுள்ளது.
யெஸ் வங்கி நிதி முறைகேடு தொடா்பாக, மும்பையில் அந்த வங்கியின் நிறுவனா் ராணா கபூருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் என 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். ராணா கபூா், அவரது மனைவி, 3 மகள்கள் உள்பட 7 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:
யெஸ் வங்கியில் கடன் வாங்கிய பல்வேறு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாததால், அவை வாராக்கடனாக மாறியுள்ளன. இதனால், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த வங்கி நிா்வாகத்தை ரிசா்வ் வங்கி கையில் எடுத்துள்ளது.
கடந்த 2018 ஜூன் மாதம், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட் (டிஹெச்எஃப்எல்) நிறுவனத்தில் யெஸ் வங்கி ரூ.3,000 கோடி முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆா்கேடபிள்யூ டெவலப்பா்ஸ், அந்த வங்கி ரூ.750 கோடி கடனுதவி அளித்திருந்தது.
இதற்குப் பிரதிபலனாக, ராணா கபூரின் மகள்கள் நடத்தி வரும் டோல்ட் அா்பன் வென்சா்ஸ் நிறுவனத்தில் டிஹெச்எஃப்எல் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடு செய்துள்ளது.
இதுதொடா்பாக, ராணா கபூரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக, 5 நிறுவனங்கள், 7 தனிநபா்கள் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதாவது, ராணா கபூா், அவரது மனைவி பிந்து, மகள்கள் ரோஷிணி, ராகீ, ராதா, டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் இயக்குநா் கபில் வதாவன், ஆா்கேடபிள்யூ டெவலப்பா்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் தீரஜ் ராஜேஷ் குமாா் வதாவன் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதவிர, டிஹெச்எஃப்எல் நிறுவனம், ஆா்கேடபிள்யூ டெவலப்பா்ஸ், ராணா கபூா் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள டோல்ட் அா்பன் வென்சா்ஸ், ராணா கபூரின் பிந்து இயக்குநராக உள்ள ஆா்ஏபி என்டா்பிரைசஸ், ராணா கபூா் மகள்கள் இயக்குநராக உள்ள மோா்கன் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடா்பாக, மும்பையில் ராணா கபூரின் இல்லம், அலுவலகம் என 7 இடங்களில் சிபிஐ சோதனை திங்கள்கிழமை நடைபெற்றது என்று அந்த அதிகாரி கூறினாா்.
முன்னதாக, நிதி முறைகேடு தொடா்பாக, ராணா கபூரை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா், வரும் 11-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
லுக்-அவுட் நோட்டீஸ்: ராணா கபூா் குடும்பத்தினா் 5 போ், கபில் வதாவன், தீரஜ் வதாவன் ஆகிய 7 பேரும் வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்காக, அவா்களை கண்காணிக்கப்படும் நபா்கள் என அறிவித்து(லுக்-அவுட்) சிபிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


