ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கர்நாடகத்தில் மே மாத இறுதிக்குள் 60 கரோனா ஆய்வகங்கள்

கரோனா சோதனைத் திறனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் கர்நாடக மாநிலத்தில் மே மாத இறுதிக்குள்

News image
Updated On :1 மே 2020, 8:45 am

PTI

பெங்களூரு: கரோனா சோதனைத் திறனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் கர்நாடக மாநிலத்தில் மே மாத இறுதிக்குள் 60 ஆய்வகங்கள் தொடங்கப்படும் என்று மருத்துவ கல்வி அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார். 

தற்போதுள்ள 26 ஆய்வகங்களில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் மாதிரிகள் சோதிக்கும் திறன் கொண்டவை. மேலும், சோதனை திறனை அதிகரிக்க அரசு முற்பட்டுள்ளது. 

கடக், விஜயபுரா மற்றும் துமகுரு ஆகிய இடங்களில் கரோனா சோதனை ஆய்வகங்கள் தொடங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் வெறும் 2 சோதனை ஆய்வகங்கள் இருந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.  

இது மேலும் அதிகரித்து மே மாத இறுதிக்குள் 60 ஆய்வகங்கள் இருக்கும் என்று சுதாகர் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி சுகாதாரத் துறை தகவலின் படி, இதுவரை கர்நாடகத்தில் மொத்தம் 60,156 பேரின் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 57,548 பேருக்கு கரோனா இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், 4,752 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, அவற்றில் 4,307 பேருக்கு கரோனா எதிர்மறையாக உள்ளது. 

இந்த மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 576 ஆக உள்ளது. இதில் 22 பலியாகியுள்ளனர். மேலும் 235 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.