ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜல்னா: மாநில பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 5 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் மாநில பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 மே 2020, 5:47 am

PTI

ஜல்னா: மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் மாநில பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மாநில பாதுகாப்புப் படை வீரர்கள் (எஸ்ஆர்பிஎஃப்) 3 பேர் உள்பட 5 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட சிவில் சர்ஜன் மதுகர் ரத்தோட் தெரிவித்தார். 

ஜல்னாவைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று மாநில பாதுகாப்புப் படை வீரர்கள் 
மாலேகானுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டனர். இந்நிலையில் அவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது நாசிக் மாவட்டம் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதித்தோரின் சளி மாதிரிகளை ஔரங்காபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இருவர் மும்பைக்குச் சென்று திரும்பியவர்கள் ஆவார். மொத்தம் எட்டு பேர் இதுவரை தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.