தில்லியில் ஒரேநாளில் கரோனாவுக்கு 18 பேர் பலி; 571 பேர் பாதிப்பு
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தில்லியில் கடந்த இரு தினங்களாக ஒருநாள் பாதிப்பு 500 ஐக் கடந்த நிலையில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்றும் 500க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
தில்லி சுகாதாரத் துறை இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில்,
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்த பாதிப்பு 11,659 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரேநாளில் 18 பேர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 194 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 5,898 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5,567 பேர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...