சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இல்லம் திரும்பினார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத காலத்துக்குப் பின் ஹைதராபாத்தில் இருந்து அமராவதியில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார்.


திருப்பதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத காலத்துக்குப் பின் ஹைதராபாத்தில் இருந்து அமராவதியில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மார்ச் 20 ஆம் தேதி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திற்குச் சென்றார். அதற்குப்பின் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்தார்.
தற்போது பொது முடக்கத்தில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால், அவர் தெலங்கானாவிலிருந்து ஆந்திரத்துக்கு வர இரு மாநிலங்களிடமும் விண்ணப்பித்து அனுமதி பெற்றார்.
அவர் திங்கள்கிழமை காலை ஐதராபாத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 2 மாத கால இடைவெளிக்குப் பின் அமராவதியில் உள்ள தனது இல்லத்துக்கு சந்திரபாபு நாயுடு வந்து சேர்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...