தில்லியில் உள்ள ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 

தில்லியின் கேசவ்புரம் பகுதியில் உள்ள ஷூ தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். major fire
nk_13_fire_1304chn_122_8
nk_13_fire_1304chn_122_8
Updated on
1 min read

தில்லியின் கேசவ்புரம் பகுதியில் உள்ள ஷூ தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

வடமேற்கு தில்லியில் உள்ள கேசவ்புரத்தில் ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து காலை 8.34 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வந்ததாகத் தீயணைப்பு அதிகாரி அனுஜ் கார்க் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 23 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கட்டிடத்தில் சிக்கியவர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த 12 மணி நேரத்திற்குள் தில்லியில் நடைபெற்ற இரண்டாவது தீ விபத்து இதுவாகும். மே 25-ம் தேதி இரவு துலகாபாத் சேரிப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 250 குடிசைகள் எரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com