தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதம்: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 மே 2020, 1:48 pm

DIN


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட தகவலின்படி:

இந்தியாவில் மொத்தம் 1,51,767 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 64,426 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. அதுவே உலகளவில் 6.36 சதவீதமாக உள்ளது. 

நாட்டில் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 624 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு ஆய்வகங்கள் 435, தனியார் ஆய்வகங்கள் 189. செவ்வாய்கிழமை மட்டும் 1,16,041 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 32,42,160 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மே 27 நிலவரப்படி கரோனா தொற்றுக்கென பிரத்யேக மருத்துவமனைகளில் 1,58,747 தனி படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 20,355 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும், 69,076 ஆக்ஸிஜன் உதவியுடன் கூடிய படுக்கை வசதிகளும் உள்ளன.

கரோனா தொற்றுக்கென பிரத்யேக சுகாதார மையங்களில் 1,32,593 தனி படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 10,903 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும், 45,562 ஆக்ஸிஜன் உதவி படுக்கை வசதிகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.