/

ஒரே நாளில் தில்லியில் 1,106 பேருக்கு கரோனா

தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,106 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

News image
Updated On :29 மே 2020, 9:44 am

DIN


தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,106 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

நேற்று முதல் முறையாக தில்லியில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், இன்று புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,106 ஆக உள்ளது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது. உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 398ஆக அதிகரித்ததாக தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். 

முன்பு, கடந்த புதன்கிழமை 792 போ் பாதிக்கப்பட்டனர், வியாழக்கிழமை முதல் முறையாக 1,024 பாதிக்கப்பட்டததுதான் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 17,386 ஆக உள்ளது. இதில், 7,846 போ்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.