இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனா: கேரளத்தில் 61, கர்நாடகத்தில் 299 பேருக்கு புதிதாக தொற்று

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2020, 10:40 am

DIN


கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளம்:

கேரள நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்ததாவது:

கேரளத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 37 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் திரும்பியுள்ளனர். 4 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 670 ஆக உள்ளது.

கர்நாடகம்:

கர்நாடக நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:

மே 30 மாலை 5 முதல் மே 31 மாலை 5 மணி வரை கர்நாடகத்தில் புதிதாக 299 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,221 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.