/

அசாம் முன்னாள் முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News image

தருண் கோகோய்

Updated On :2 நவம்பர் 2020, 12:43 pm

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். 

மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவருக்கு அம்மோனியா அளவு சற்று அதிகமாக உள்ளதால் வென்டிலேட்டரில் வைத்துள்ளதாகவும் மற்றபடி சுயநினைவுடன் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கோகோயின் உடல்நிலையை ஒன்பது பேர் கொண்ட மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி அன்று அவர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.