/

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் பவார்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

News image

அஜித் பவார்(கோப்புப்படம்)

Updated On :2 நவம்பர் 2020, 11:37 am

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

உடல்நிலை சீராக இருப்பினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று இன்று அவர் வீடு திரும்பினார். மேலும், ஒரு சில நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளப் போவதாக கூறியுள்ளார். 

மேலும், தனக்கு சிறப்பான சிகிச்சையளிக்க மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.