ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மிரட்டலுக்கு ரூ.1,000: கொலைக்கு ரூ.55,000: சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்த உ.பி. இளைஞர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் துப்பாக்கிகள் இடம்பெற்ற சுவரொட்டிகள் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News image

சர்ச்சைக்குரிய விளம்பர சுவரொட்டி

Updated On :5 நவம்பர் 2020, 6:12 pm

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தில் துப்பாக்கிகள் இடம்பெற்ற சுவரொட்டிகள் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் அதிர்ச்சி தரும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது தற்போது பேசுபொருளாகி உள்ளது.

இளைஞர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் இருக்கும் சுவரொட்டியில் தங்களது சேவைக்கான கட்டணங்கள் என குற்றச்சம்பவங்களை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் ஒருவரை மிரட்டுவதற்கு ரூ.1000 வசூலிக்கப்படும் எனவும், எவரையேனும் தாக்குவதற்கு ரூ.5 ஆயிரம் எனவும், காயம் ஏற்படுத்துவதற்கு ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நபரைக் கொலை செய்வதற்கு ரூ.55 ஆயிரம் வரை சேவைக் கட்டணமாக பெறப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இதையடுத்து அந்த இளைஞர் சரதவல் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.