கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாப்: 'ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'

பஞ்சாபில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வரிடம் அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை

News image

ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (கோப்புப்படம்)

Updated On :6 நவம்பர் 2020, 8:15 am

DIN

பஞ்சாபில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வரிடம் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

பஞ்சாபில் விவசயிகள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரயில்களும் செல்ல இயலாத வகையில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாபில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து வருகிறார்.  

இதனிடையே இன்று (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் நேரில் சந்தித்து ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய ரயில்வேத்துறை சார்பில் ரயில்களை இயக்கத் தயாராக உள்ளதாகவும், தண்டவாளங்களில் விவசயிகளின் போராட்டங்களை சமரசம் செய்து, ரயில்களுக்கும், ரயில்வே பொருள்களுக்கும், பயணிகளுக்கும் எந்தவித சேதமும், ஆபத்தும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.