தெலங்கானாவில் இன்று மேலும் 1,607 பேருக்குத் தொற்று
தெலங்கானாவில் இன்று புதிதாக 1,607 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2,48,891 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 937 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,27,583 ஆக உயர்ந்துள்ளது. 17,134 பேர் வீடு மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 50,357 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 8,46,2,081 ஆகும். 577 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1,25,562 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...