புதுச்சேரி முன்னாள் ஆளுநர் சந்திராவதி காலமானார்
ஹரியாணாவின் முதல் பெண் எம்.பி.யும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான சந்திராவதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.


ஹரியாணாவின் முதல் பெண் எம்.பி.யும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான சந்திராவதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.
ஜனதா கட்சித் தலைவராக இருந்த சந்திராவதி 1977-இல் ஹரியாணாவின் முதல் எம்.பி. ஆனார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்த அவர் 1990-இல் புதுச்சேரியின் ஆளுநரானார்.
நவம்பர் 5-ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதையடுத்து, அவரது சொந்த கிராமத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது.
சந்திராவதியின் மறைவுக்கு ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...