சபரிமலை ஐயப்பன் கோயில் ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. எனினும், திங்கள்கிழமை முதலே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
கரோனா காலம் என்பதால், ஒருநாளைக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். பக்தர்கள் தரிசன் மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும். கோயில் வளாகங்களில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின்படி வாரநாள்களில் தலா 1,000 பேரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 2,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், திருவல்லா, செங்கனூர் மற்றும் கோட்டயம் உள்ளிட்ட இடங்களிலுள்ள அனைத்துப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு மையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


