/

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

News image

ஆப்கனின் உருஸ்கன் மாகாணத்தில் ராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில், 12 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On :19 நவம்பர் 2020, 9:16 am

ANI


7 civilians including women, children killed in mortar attack in Kunduz

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

குண்டூஸ் நகரில் உள்ள தலோகா பகுதியில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

சமீப காலமாகவே, இமாம் சாஹிப், டாஷ்-இ-ஆர்ச்சி மாவட்டம் மற்றும் குண்டூஸ் நகரத்தில் ஆப்கானிய பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து தலிபான் தீவிரவாதிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

தோஹாவில் அமைதி முயற்சிகள் தொடர்ந்தாலும் நாட்டில் வன்முறை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.