நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94% ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 83.35 லட்சமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94% ஆக உயர்வு


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 83.35 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 13-வது நாளாக ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் இருந்து வருகிறது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 89,58,484-ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த  585 போ் உயிரிழந்தனா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,31,578 -ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.47 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 83,83,602-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 93.58 சதவீதமாகும்.

நாடு முழுவதும் 4,43,303 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து ஒன்பதாவது நாளாக 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் சதவீதம் 4.95 ஆக குறைந்துள்ளது.

நாட்டில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 10,28,203  பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 18-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 12,85,08,389 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 44,493 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

நாட்டில் தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 81,207 ஆக உள்ளது. கேளத்தில் 69,516 பேரும் தில்லியில் 42,458 பேரும் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com